தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் உடனான மோதலால் கட்சியை உடைத்தார் அஜித் பவார்.
இதைத்தொடர்ந்து தேசியவாத காங்கிரசில் இருந்து அஜித்பவார் உள்ளிட்டோர் விலகி ஆளும் பாஜக கூட்டணியில் இன்று இணைந்தனர்.
இந்தநிலையில், சிவசேனா – பாஜக கூட்டணி அரசில் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித்பவார். அஜித் பவார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 8 பேருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
மராட்டிய மாநிலத்தில் 8ஆவது துணை முதல்-மந்திரியாக அஜித் பவார் பதவியேற்றுக்கொண்டார். 2019ல் பாஜகவுடன் இணைந்து மராட்டிய துணை முதல்-மந்திரியாக பதவியேற்று பின்னர் விலகினார்.
பதவியேற்ற 80 மணிநேரத்தில் துணை முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகி தேசியவாத காங்கிரசில் மீண்டும் இணைந்தார். பின்னர் காங்கிரஸ் உள்ளிட்ட மகா விலாஸ் அகாதி கூட்டணியில் மீண்டும் துணை முதல்-மந்திரி ஆனார் அஜித் பவார்.