பிரித்தானிய பயணத்தின் போது மன்னர் சார்லஸ் மற்றும் பிரதமர் ரிஷி சுனக்கை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சந்திக்கவுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஜூலை 9ம் திகதி பிரித்தானியாவுக்கு வருகை தரவுள்ளார்.
இரண்டு நாட்கள் அவர் பிரித்தானியாவில் முக்கிய சந்திப்புகளை முன்னெடுப்பார் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வருகையின் போது, முடி சூட்டப்பட்ட பின்னர் சார்லஸ் மன்னரை முதன் முறையாக பைடன் சந்திக்கவிருக்கிறார்.
பின்னர் ரிஷி சுனக்கை சந்திக்கவுள்ளார். அதன்படி மன்னர் சார்லஸ் மற்றும் பிரதமர் சுனக் ஆகியோருடன் தனித்தனியாக ஜோ பைடன் சந்திப்பை முன்னெடுப்பார்.
கடந்தாண்டு சார்லஸின் தாயார் எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் ஜோ பைடன் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.