கனடாவில் சீரற்ற காலநிலை காரணமாக காணாமல் போன இரண்டு பேரை தேடும் பணிகள் சிக்கல் மிக்கது என போலீசார் தெரிவிக்கின்றனர்.
அண்மைய நாட்களில் நிலவிய கடுமையான மழை வெள்ளம் மற்றும் புயல் காற்று காரணத்தினால் இரண்டு பேர் காணாமல் போயிருந்தனர்.
40 வயது மதிக்கத்தக்க ஆண் மற்றும் பெண் ஒருவர் இவ்வாறு கடந்த சனிக்கிழமை காணாமல் போயிருந்தனர்.
இந்த இருவரையும் கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
Éternité எனும் நதி பகுதியில் இந்த இருவரும் காணாமல் போய் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நதியின் புவியியல் கட்டமைப்பு நீரில் கலந்துள்ள மாசு போன்ற பல காரணிகளினால் குறித்த இருவரையும் கண்டுபிடிப்பதில் சிரமங்கள் நிலவி வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.