கனடாவின் New Brunswick மாகாணத்தில் ஒரு மர்ம மூளை நோய் மக்களை பாதித்துவருவதால் சுகாதார அதிகாரிகள் கவலையடைந்துள்ளனர்.
இந்த மூளைப் பிரச்சினையானது, இல்லாததை இருப்பதுபோல் தோன்றச் செய்வது, தசைச் சிதைவு, பார்வை பிரச்சினைகள், நினைவாற்றல் இழப்பு மற்றும் சில நரம்பியல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது.
இந்த மூளை பிரச்சினை குறிப்பாக இளைஞர்களை பாதித்து வருவதால் சுகாதாரத்துறை அதிகாரிகள் கவலையடைந்துள்ளனர்.
நரம்பியல் நிபுணரான Dr. Alier Marrero மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள், கிளைபோசேட் (Glyphosate) என்னும் களைக்கொல்லி இந்த மூளை பிரச்சினைகளுக்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.