அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவுக்கு எதிரான அமலாக்கத்துறை மேல்முறையீட்டு வழக்கு வரும் ஜூலை 24ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஒரு வாரத்திற்குள் அமர்வு அமைக்க சென்னை ஐகோர்ட்டிற்கு சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது. மேலும் வழக்கை விரைந்து மெரிட் அடிப்படையில் விசாரித்து முடிக்கவும் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் செந்தில் பாலாஜி வழக்கில் தினமும் கடுமையான ஆதார அழிப்பு நடைபெறுகிறது. அவர் மருத்துவமனையில் இருப்பதால் எங்களால் கடமையை செய்ய முடியவில்லை.
செந்தில் பாலாஜி செல்வாக்கு மிக்க நபர் என்பதால் , விசாரணையை தாமதப்படுத்தினால் வழக்கு நீர்த்துப் போகும் என்று சுப்ரீம் கோர்ட்டில் அமலாக்கத்துறை அடுக்கடுக்கான புகார்களை முன் வைத்துள்ளது.