நொவாயா கெசெட்டா எனப்படும் செய்தித்தாளில் பிரபல பத்திரிகையாளராக பணிபுருந்து வருபவர் எலெனா மிலாஷினா.
இவர் அலெக்சாண்டர் நெமோவ் என்ற வழக்கறிஞருடன் உள்ளூர் விமான நிலையத்திலிருந்து செச்சென் தலைநகர் குரோஸ்னிக்கு நேற்று காலை சென்று கொண்டிருந்தார்.
அப்போது முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் அவர்கள் சென்றுகொண்டிருந்த காரை நிறுத்தினர். பின்னர் மிருகத்தனமாக அவர்களை தாக்கினர்.
இதில் படுகாயமடைந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேல் சிகிச்சைக்காக மாஸ்கோவிற்கு அவர்கள் அனுப்பப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும்போது வெளியிடப்பட்டிருக்கும் அவரது புகைப்படத்தில் அவர் படுக்கையில் அமர்ந்திருப்பதும், அவர் முகம் முழுவதும் தாக்குதல்காரர்கள் வீசிய பச்சை சாயத்தையும் காண முடிகிறது.
அவரது தலையை தாக்கியவர்கள், அவர் தலையை மொட்டையடித்திருக்கின்றனர். அவரது கையில் கட்டுகள் உள்ளன. அவரது விரல்கள் பல உடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து மிலாஷினா, செச்செனிய மனித உரிமை அதிகாரியான மன்சூர் சோல்டயேவிடம் இது திட்டமிட்ட உறுதியான தாக்குதல் என்று குறிப்பிட்டார்.