Home உலகம் துப்பாக்கிகள் அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் அமெரிக்கா முதல் இடத்தில்

துப்பாக்கிகள் அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் அமெரிக்கா முதல் இடத்தில்

by Jey

இம்மாதம் பிலடெல்பியா, பால்டிமோர் மற்றும் ஃபோர்ட் வொர்த் ஆகிய இடங்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பத்து பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 38 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்காவில் அரேங்கேறி வரும் துப்பாக்கிசூட்டு சம்பவங்களை கட்டுப்படுத்தும் விதத்தில் சட்டமொன்றினை நிறைவேற்ற அந்நாட்டு ஜனாபதி ஜோ பைடன் தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவின் சுதந்திர தின விடுமுறையான ஜுலை 4 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உள்ளூர் கேளிக்கை நிகழ்வுகளுக்கு பிறகு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டதுடன் எட்டு பேர் வரையில் காயமடைந்தனர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தின் பிலடெல்பியா நகரத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இரு சிறுவர்கள் உள்ளிட்ட ஐந்து பேர் கொல்லப்பட்டதுடன் இருவர் காயமடைந்திருந்தனர்.

மேலும் கடந்த திங்கட்கிழமை இரவு பால்டிமோர் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 28 பேர் வரையில் காயமடைந்தனர். இவர்களில் அதிகமானோர் சிறுவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

related posts