ஆந்திர பிரதேசத்தின் பபட்லா மாவட்டத்தில் வசித்து வந்தவர் பொட்டி வெங்கட ராஜேஷ் குமார் (வயது 44).
அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்திற்கு கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரியில் அவர் சென்று உள்ளார். இதன்பின்னர், கடந்த மே மாதத்தில் அவரது மனைவி, குழந்தைகள் அமெரிக்காவுக்கு சென்று உள்ளனர்.
அமெரிக்காவின் ஸ்டார்ட்-அப் நிறுவனம் ஒன்றில் ராஜேஷ் வேலை செய்து வந்து உள்ளார். இந்த நிலையில், அமெரிக்கா முழுவதும் சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், ஜாக்சன்வில்லே பீச்சுக்கு அவரது மனைவி, மகன் மற்றும் மகள் ஆகியோருடன் ராஜேஷ் சென்று உள்ளார்.