நாடளாவிய ரீதியில் பொது வைத்தியசாலைகளில் இரத்தம் ஏற்றும் இயந்திரங்களுக்கு தட்டுப்பாடு
நாடளாவிய ரீதியில் உள்ள பல பொது வைத்தியசாலைகளில் இரத்தம் ஏற்றும் இயந்திரங்கள் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இதனால் அதிகளவில் மரணங்கள் இடம்பெற்று வருவதாக குருநாகல் மாவட்ட சபை உறுப்பினர் தயாசிறி ஜயசேகர பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சின் நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினையினால் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும், இரத்தம் ஏற்றும் இயந்திரங்களை திருத்துவதற்கு டெண்டர் கோரப்பட்டிருந்த போதிலும், அந்த டெண்டர்களில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளால் அதனை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
மேலும் இன்னும் சில தினங்களில் பிரச்சினைக்கு தீர்வு காண்பதாகவும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.