கனடாவின் சில பகுதிகளில் வெப்பநிலை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
ரொறன்ரோ உள்ளி;ட்ட சில வெப்பநிலை அதிகரிப்பு தொடர்பில் கனடிய சுற்றாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.
ரொறன்ரோ, ஹமில்டன் ஆகியன பகுதிகளில் வெப்பநிலை அதிகளவில் காணப்படும் எனவும் இந்த நிலை, ஒரு வாரத்திற்கு நீடிக்கும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
வெப்பநிலையானது 25 முதல் 35 பாகை செல்சியஸ் வரையில் அதிகரிக்கலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
வெப்பநிலை மற்றும் ஈரப்பதன் அதிகளவில் காணப்படுவதனால் காற்றின் தரமும் குறைவடையும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.