Home இந்தியா அவசர சட்டம், மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றம்

அவசர சட்டம், மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றம்

by Jey

டெல்லியில் மிக பிரம் மாண்டமாக கட்டப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி கடந்த மே மாதம் 28-ம் தேதி தொடங்கி வைத்தார்.

மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு நடைபெற்றால், எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

அதற்கேற்ப அதிக எண்ணிக்கையில் இருக்கைகளுடன் நாடாளுமன்ற கட்டிடம் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் வரும் 20-ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கடந்த 1-ஆம் தேதி அறிவித்திருந்தார்.

மழைக்கால கூட்டத் தொடரின் போது முக்கியமாக பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.

மேலும், பணி நியமனம், பணி மாற்றம் போன்ற விவகாரங்களில் தலைநகர் டெல்லி நிர்வாகத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு கொண்டு வந்த அவசர சட்டம், மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

related posts