கொழும்பு – தேசிய கண் வைத்தியசாலையில் பெண் ஒருவர் கண் சத்திரசிகிச்சைக்குப் பின்னர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் உடனடி விசாரணை நடத்தப்பட வேண்டும் என சுகாதார நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சத்திரசிகிச்சைக்கு முன்னர், மயக்க மருந்து கொடுக்கப்பட்டதால் ஏற்பட்ட சில சிக்கல்களால் பெண்ணின் மரணம் ஏற்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளதாக சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசிய கண் வைத்தியசாலையில் நேற்று (05.07.2023) கண் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பெண் ஒருவர், சத்திரசிகிச்சையின் பின்னர் சுயநினைவின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இறந்த இரண்டு குழந்தைகளின் தாயான குறித்த பெண்ணுக்கு, கொடுக்கப்பட்ட மயக்க மருந்தில் ஏற்பட்ட சிக்கலால் இந்த மரணம் நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக குமுதேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பில், உயிரிழந்த பெண்ணின் உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் தம்மால் எழுப்பப்பட்டுள்ள சந்தேகங்களை எவரும் நிராகரிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.