Home இலங்கை துஷ்பிரயோகத்திற்கு உள்ளான இளம் பிக்குமார்கள்

துஷ்பிரயோகத்திற்கு உள்ளான இளம் பிக்குமார்கள்

by Jey

நாவலப்பிட்டி பிரதேசத்தில் விகாரை ஒன்றில் வசித்து வந்த மூன்று இளம் பிக்குமாரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பாக அதே விகாரையில் உள்ள பிக்குவை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

இதனையடுத்து நாவலப்பிட்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய பிக்குவை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் ஹர்ஷினி ராஜகருண உத்தரவிட்டுள்ளார்.

துஷ்பிரயோகத்திற்கு உள்ளான இளம் பிக்குமார் மற்றும் விகாரையில் உள்ள ஏனைய இளம் பிக்குமாரை நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலையின் விசேட சட்டவைத்திய அதிகாரியிடம் அனுப்பி வைத்து, மருத்துவ அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறும் நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

நாவலப்பிட்டி கினிகத்ஹேன பிரதான வீதிக்கு அருகில் உள்ள விகாரையில் மூன்று இளம் பிக்குகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

முறைப்பாடு தொடர்பாக விசாரணைகளை நடத்திய பொலிஸார் சந்தேக நபரான பிக்குவை கைது செய்துள்ளனர்.

இலங்கையில் அண்மைய காலமாக பாலியல் துஷ்பிரயோகம், வன்புணர்வு சம்பவங்களுடன் தொடர்புடைய பௌத்த பிக்குமார் கைது செய்யப்படுவது அதிகரித்துள்ளது.

இளம் வயதில் துறவறம் பூணும் இளம் பிக்குமார் விகாரைகளில் பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவும் ஏற்கனவே குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்துடன் அதற்கான ஆதாரங்களையும் ஊடகங்களிடம் வழங்கியிருந்தார்.

related posts