Home இலங்கை யாழ் தேவி புகையிரதம் அசுர வேகத்தில்……

யாழ் தேவி புகையிரதம் அசுர வேகத்தில்……

by Jey

அனுராதபுரம் புகையிரத நிலையத்திலிருந்து வவுனியா தொடக்கம் ஓமந்தை புகையிரத நிலையம் வரையில் இன்று காலை யாழ் தேவி புகையிரதம் அசுர வேகத்தில் ஒலி எழுப்பியவாறு பயணம் செய்தது.

இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் இந்திய நிறுவனத்தினால் மஹவ முதல் ஓமந்தை வரையான புகையிரத பாதையின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டன

புனரமைப்பு பணிகள் இரண்டு கட்டமாக அபிவிருத்தி செயற்திட்டத்தில் வவுனியா தொடக்கம் அனுராதபுரம் வரையில் 48 கிலோமீற்றர் புகையிரத பாதையும், வவுனியா ஓமந்தை வரையான 13 கிலோமீற்றர் புகையிரத பாதை புனரமைக்கப்பட்டன.

இந்த அபிவிருத்தி செயற்திட்டத்திற்கு 91. 27 மில்லியன் டொலர் முதலீடு செய்யப்பட்டிருந்தது.

இந்த அபிவிருத்தி செயற்திட்டம் நிறைவுப் பெற்றதை தொடர்ந்து ஒரு மணித்தியாலத்தில் 100 கிலோமீற்றர் வேகத்தில் புகையிரத்தை இயக்க முடியும் தெரிவிக்கப்பட்ட நிலையிலேயே இன்று பரிட்சார்த்தமாக யாழ் தேவி புகையிரதம் பயணித்திருந்தது.

related posts