கடந்த ஜூன் மாதம் ஒன்றாரியோ மாகாணத்தில் ஐந்து பெண்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், இந்த மாதம் இதுவரையில் மூன்று பெண்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கொலைகளில் பல கொலைகள் பெண்களுக்கு நெருக்கமான ஆண்களினால் மேற்கொள்ளப்பட்டவை என தெரிவிக்கப்படுகின்றது.
பால்நிலை அடிப்படையிலான வன்முறைகள் குறிப்பாக வீட்டு வன்முறைச் சம்பவங்களை கட்டுப்படுத்த மாகாண அரசாங்கங்கள் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.