Home கனடா கனடாவில் இறுதிச்சடங்கு மையத்தில் 300 உடல்கள்

கனடாவில் இறுதிச்சடங்கு மையத்தில் 300 உடல்கள்

by Jey

கனேடிய மாகாணமொன்றில், கல்லறை நிர்வாகத்துக்கும் ஊழியர்களுக்குமிடையிலான பிரச்சினையால், கனடாவின் மிகப்பெரிய கல்லறை என அழைக்கப்படும் கல்லறையில் 300 உடல்கள் புதைக்கப்படாமல் இறுதிச்சடங்கு மையத்தில் வைக்கப்பட்டுள்ளன.

169 ஆண்டு கால பழமை மிக்க அந்த கல்லறையின் வேலியிலுள்ள இடைவெளி வழியாக உள்ளே நுழைந்து தனது 13 வயது மகனின் கல்லறையைச் சென்று பார்த்து, அதனருகே எக்கச்சக்கமாக வளர்ந்துள்ள புல்லை வெட்டி சரி செய்துவிட்டு, குப்பைகளையும் சுத்தம் செய்துவிட்டு வருகிறார் Nancy Babalis.

அவரைப் போலவே பலர் ஞாயிற்றுக்கிழமைகளில் கல்லறையின் வேலி வழியாக உள்ளே நுழைந்து தங்கள் அன்பிற்குரியவர்களின் கல்லறைகளைக் கண்டு வருகிறார்கள்.

இன்னொரு பக்கம், கல்லறையின் மறு பகுதியில் அமைந்துள்ள இறுதிச்சடங்கு மையத்தில், சுமார் 300 உடல்கள் குளிர்பதனப் பெட்டிகளில் புதைக்கப்படுவதற்காக காத்திருக்கின்றன.

 

related posts