சீனாவின் தென்கிழக்கு குவாங்டாங் மாகாணத்தில் மழலையர் பாடசாலை ஒன்றில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 6 பேர் பலியாகியுள்ளாதாகவும் மற்றும் ஒருவர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய லியான்ஜியாங் நகரில் ‘வு’ என்ற குடும்பப்பெயர் கொண்ட 25 வயதுடைய நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்டவர்களில் மூன்று குழந்தைகள், ஒரு ஆசிரியர் மற்றும் இரண்டு பெற்றோர்கள் அடங்குவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதுடன், குறித்த சில நேரங்களிலிலேயே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.