அவுஸ்திரேலிய நீதிமன்றம் இந்திய பெண்ணை அடிமையாக்கி சித்ரவதை செய்த சம்பவத்தில்
அவுஸ்திரேலியாவில் வசிக்கும் வயதான இந்திய தம்பதியினருக்கு எதிரான தண்டனையை
மேலும் இரண்டரை ஆண்டுகளாக அதிகரித்து, தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்தியாவின் தமிழ்நாட்டை சேர்ந்த குமுதினி கண்ணன் மற்றும் கந்தசாமி கண்ணன் ஆகியோர்
தமது வீட்டில் பணிபுரிய ஒரு இந்தியப் பெண்ணை வேலைக்கு அமர்த்தினர்.
24 மணி நேரமும் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்த அந்த பெண்ணுக்கு வீட்டு
வேலைகள், சமையல் செய்தல் மற்றும் குழந்தைகளைப் பராமரிப்பது போன்ற பணிகளும்
வழங்கப்பட்டிருந்தன.
அந்த பெண்ணை பணிப்பெண்ணாக பார்க்காமல் மனிதாபிமானம் இல்லாத அடிமையாக
நடத்தியுள்ளனர். கடுமையாக வேலைகள் காரணமாக அந்த பெண்ணின் உடல் நலம்
பாதிக்கப்பட்டுள்ளது.
இந்திய பெண் ஊட்டச்சத்து குறைபாடு, நீரிழிவு மற்றும் குடலிறக்கத்தால் நோய்களால்
பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனையடுத்து அவுஸ்திரேலிய சமஷ்டி பொலிஸார், அடிமைத்தனத்திற்கு எதிரான சட்டத்தின்
கீழ் தம்பதிக்கு எதிராக வழக்கு பதிவு செய்தனர்.
நீதிமன்றத்தில் தொடர்பட்ட வழக்கில் இந்திய தம்பதிக்கு எதிரான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட
நிலையில், கடந்த 2021 ஆம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் வாதப் பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில், வயதான தம்பதியின்
தண்டனையை மேலும் இரண்டரை ஆண்டுகள் நீட்டித்து அவுஸ்திரேலிய நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் சாட்சியை அச்சுறுத்த முயன்ற குமுதினி கண்ணனுக்கு மொத்தம் 8 ஆண்டு
கடூழிய சிறைத்தண்டனையும், அதில் 4 ஆண்டு பிணை மறுப்பும், கந்தசாமி கண்ணனுக்கு 6
ஆண்டு கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. , கந்தசாமிக்கு மூன்று ஆண்டுகளுக்கு
முன்னர் பிணை வழங்க முடியாது.
இந்த தம்பதியினர் தாம் செய்த குற்றம் தொடர்பில் மனம் வருந்தவில்லை எனவும்
இவர்களிடம் மனிதாபிமானமே இல்லை என்பதுடன் குற்ற உணர்வு இல்லை எனவும் இதனால்,
கடுமையான தண்டனை வழங்க வேண்டும் பாதிக்கப்பட்ட பெண் சார்பில் ஆஜரான
சட்டத்தரணிகள் நீதிபதியிடம் கேட்டுக்கொண்டனர்.
33333333333333333