உத்தரகாண்ட் மாவட்டத்தில் கனமழை பெய்துவரும் நிலையில், திங்களன்று இரவு உத்தரகாசியில் பாலத்தின் அருகே திடீரென ஏற்பட்ட நிலச்சரிவால், மூன்று வாகனங்கள் புதைந்தன.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மாநில பேரழிவு மற்றும் மீட்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
நிலச்சரிவில் புதையுண்ட நான்கு பேரில் மூன்று பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. நான்காவது நபரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக பட்வாடி துணை ஆட்சியர் தெரிவித்துள்ளார். காயமடைந்த ஏழு பேரில் இரண்டு பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இந்த சம்பவத்துக்கு உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். கனமழையின் போது மக்கள் தேவையற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.