அமெரிக்க கிரிக்கெட் எண்டர்பிரைசசினால் ஒழுங்கு செய்யப்பட்ட மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 14ம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது.
குறித்த தொடரில், டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ்,லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் ,
எம்.ஐ நியூயார்க் ,சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் ,சியாட்டில் ஓர்காஸ் மற்றும்
வாஷிங்டன் ப்ரீடம் எனும் ஆறு அணிகள் பங்கேற்கவுள்ளன.
ஐ.பி.எல் தொடருக்கு உலக அளவில் கிடைத்த வரவேற்பின் காரணமாக தற்போது பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் நிர்வாகங்களும் தங்கள் நாட்டில் இருபதுக்கு இருபது லீக் போட்டிகளை அறிமுகப்படுத்தி நடத்தி வருகின்றன.
அதற்கமைய அமெரிக்காவில் முதல் முறையாக நடைபெற இருக்கும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 14ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
குறித்த தொடரின் முதலாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகத்தினால் வாங்கப்பட்ட ஃபாஃப் டு பிளெசிஸ் தலைமையிலான டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நிர்வாகத்தினால் வாங்கப்பட்ட சுனில் நரைன் தலைமையிலான லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணியும் மோதவுள்ளன.