அரசுக்குச் சொந்தமான நாட்டின் மிகப்பெரிய சில்லறை வலையமைப்பான சதொச மொத்த விற்பனை நிறுவனத்தை மறுசீரமைக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை நேற்று அனுமதி வழங்கியதாக இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
லங்கா சதொச நிறுவனம் எதிர்பார்த்த பெறுபேறுகளை அடையவில்லை அல்லது நாட்டின் பொருளாதாரத்திற்கு வினைத்திறனான பங்களிப்பை வழங்கவில்லை என்பதை அவதானித்ததன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
சதொச வலையமைப்பை மறுசீரமைக்கவும் கண்காணிக்கவும், செயல்முறை சீராக இயங்குவதை உறுதிப்படுத்தவும் விசேட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன கூறினார்.