அண்மையில் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தொகுதி வாரியாக 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளை நடிகர் விஜய் சந்தித்து ஊக்கத்தொகை வழங்கி கவுரவித்தார்.
அப்போது ஓட்டுக்கு பணம் வாங்க கூடாது என மாணவர்கள் மத்தியில் விஜய் பேசியிருந்தது தமிழக அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியது.
இதன்மூலம் விஜய் அரசியலுக்கு வருவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் இன்று தமிழகத்தின் 234 தொகுதிகளைச் சேர்ந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து விஜய் ஆலோசனை நடத்தினார்.
இதற்காக நீலங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து பனையூருக்கு காரில் வந்தார்.
அப்போது சாலையில் சிக்னல் விளக்கு சிவப்பில் இருந்த நிலையில் சிக்னலில் நிற்காமல் விஜய்யின் கார் சென்றுள்ளது.
இதையடுத்து சாலை விதிகளை மதிக்காமல் விஜய் இப்படி செய்யலாமா என பலரும் விமர்சித்துள்ளனர்.