நடிகர் விஜய் இரவு நேர பாடசாலையை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் அரசியலுக்கு வந்து கட்சி தொடங்குவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று விஜய் மக்கள் இயக்கத்தின் பொறுப்பாளர்களை சந்தித்து விஜய் பேசினார்.
இந்நிலையில் இந்த கூட்டத்தில் 234 தொகுதிகளிலும் இரவு நேர பாடசாலையை காமராஜர் பிறந்தநாளான ஜுலை 15-ம் தேதி தொடங்க நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளதாக விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட பொறுப்பாளர்கள் தெரிவித்தனர்.
கண்தானம் செய்வதற்காக விழியகம், இரத்த தானம் செய்வதற்காக குருதியகம், பசி பட்டினியால் தவிப்போருக்காக விருந்தகத்தை தொடங்கிய விஜய் தற்போது பள்ளி மாணவர்களுக்காக இரவு நேர பாடசாலையை தொடங்குகிறார்.
மேலும் முழு நேரமாக அரசியலுக்கு வந்துவிட்டால் திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என நடிகர் விஜய் பொறுப்பாளர்கள் முன்னிலையில் பேசியதாக கூறப்படுகிறது.