தமிழகத்தில் திமுக பெண் கவுன்சிலர் குடும்பத்துடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் 13வது வார்டு திமுக கவுன்சிலர் 31 வயதான தேவிபிரியா.
இவர் தனது கணவர் மற்றும் மகளுடன் சேர்ந்து விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
இதனை தொடர்ந்து 3 பேரின் உடல்களையும் மீட்டு ராசிபுரம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.