இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பால் உற்பத்தி மற்றும் கால்நடை வளர்ப்புத்துறையில் ஒத்துழைப்பு ஒப்பந்தமொன்றை கைச்சாத்திடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இலங்கையில் பால் உற்பத்தித்துறை தன்னிறைவடைதல் மற்றும் பால் உற்பத்தியில் ஈபட்டுள்ள கால்நடை வளர்ப்பாளர்களின் வருமானத்தை அதிகரித்தல் போன்ற இலக்குகளை அடைந்துக்கொள்ள இவ்வாறு இந்தியாவுடன் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நேற்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்தில் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் விவசாய அமைச்சர் இணைந்து முன்வைத்த யோசனைக்கே இவ்வாறு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாகவும் அவர் கூறினார்.
இந்தியாவுடன் ஏற்படுத்திக்கொள்ள உள்ள இந்த உடன்படிக்கைக்கு சட்டமா அதிபரும் அனுமதியை வழங்கியுள்ளார்.