Home இலங்கை இலங்கை மீனவர் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல்

இலங்கை மீனவர் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல்

by Jey

இலங்கை-காலி கடற்பகுதியில் மீன்பிடியில் ஈடுப்பட்டடிருந்த மீனவர் மீது பெட்ரோல் குண்டு தாக்ககுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த மீனவர் கடந்த ஜூன் 22ஆம் திகதி முதல் “சசிந்த புத்தா” என்ற மீன்பிடி இழுவை படகில் பயணித்துக்கொண்டிருந்த வேளையில் இந்தோனேசிய மீன்பிடி படகு என சந்தேகிக்கப்படும் மீன்பிடிக்கப்பலுடன் மோதியது.

இதனையடுத்து இலங்கை மீனவர் மற்றும் இழுவை படகு மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதலுக்கு உள்ளான குறித்த மீனவர் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

தீக்காயங்களுக்கு உள்ளான குறித்த மீனவரை மீட்ட இலங்கை கடற்படையினர், மேலதிக சிகிச்சைகளுக்காக காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மற்றும் இழுவை படகு மீது தாக்குதல் நடத்திய கப்பலை அடையாளம் காணும் பணிகள் என்பன தீவிரப்படுத்தபட்படுவதாக இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

related posts