அட்லீ தற்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து ‘ஜவான்’ படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாராவும் முக்கியக் கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனேவும் நடிக்கின்றனர். விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
ஜவான் படத்தை ரெட் சில்லீஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் கவுரி கான் தயாரித்துள்ளார்.
இப்படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற செப்டம்பர் 7 ஆம் தேதி தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது.
நேற்று முன்தினம் இப்படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியானது. இது ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற நிலையில் முன்னோட்டம் குறித்து டுவிட்டரில் பதிவிட்ட ஷாருக்கான், அட்லீ குறித்தும் அவரது மனைவி மற்றும் அவரது குழந்தை குறித்தும் பதிவிட்டிருந்தார்.