Home இந்தியா சொந்தமான ‘வானவியல் ஆய்வு மையம்’ அமைத்த விவசாயி மகன்

சொந்தமான ‘வானவியல் ஆய்வு மையம்’ அமைத்த விவசாயி மகன்

by Jey

கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் சிக்காவி தாலுகா குன்னூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நிரஞ்சன் கவுடா.

இவர் உத்தர கன்னடா மாவட்டம் முண்டுகோடு அருகே நவிலட்டே மலைப்பகுதியில் ரூ.40 லட்சம் செலவில் 60 ஏக்கர் நிலத்தில் ‘வானவியல் சுற்றுலா மையம்’ அமைத்துள்ளார்.

விவசாயியின் மகனான நிரஞ்சன் கவுடா ஐதராபாத்தில் உள்ள ஒஸ்மானியா பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.சி.(வானவியல் இயற்பியல்) படித்தார்.

அதில் நன்கு படித்த நிரஞ்சன்கவுடா சொந்தமான ‘வானவியல் ஆய்வு மையம்’ அமைக்க முயற்சி மேற்கொண்டார்.

அதில் தற்போது வெற்றியும் கண்டுள்ளார். அவரது வானவியல் ஆய்வு மையத்தில் 6 தொலைநோக்கிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

அதன்மூலம் நட்சத்திரங்கள், அவற்றுக்கு இடையேயான இடைவெளிகள் ஆகியவற்றை காண முடியும் என்று சொல்லப்படுகிறது. மேலும் காற்று மாசு, ஒளி-ஒலி மாசு ஆகியவற்றையும் கணக்கிட முடியும் என்று நிரஞ்சன் கவுடா கூறினார்.

மேலும் கர்நாடகத்திலேயே பெங்களூருவில் தான் அதிக ஒளி மற்றும் ஒலி மாசு ஏற்படுவதாகவும், காற்று மாசு ஏற்படுவதாகவும் அவர் தனது ஆய்வு மூலம் தெரிவித்து இருக்கிறார்.

 

related posts