டெங்கு நோயால் இது வரையில் 33 பேர் உயிரிழந்துள்ளதாக டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 50221 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் டெங்கு ஒழிப்பு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
இதனடிப்படையில், மேல் மாகாணத்திலேயே அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அதன் எண்ணிக்கை 25945ஆக பதிவாகியுள்ளது.
இதேவேளை, டெங்குநோய் பரவுவாக அடையாளம் காணப்பட்டுள்ள 61 சுகாதார பிரிவுகளுக்குட்பட்ட இடங்களில் உடனடியாக டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனடிப்படையில், இன்று முதல் முன்னெடுக்கப்படும் இந்த வேலைத்திட்டம் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு நடைபெறும் எனவும் சுட்டக்காட்டப்பட்டுள்ளது.