நானியின் 30ஆவது படத்திற்கு ‘ஹாய் நான்னா’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இந்த படத்தை இயக்குநர் சவுரவ் இயக்குகிறார். இதில், நடிகர் நானிக்கு ஜோடியாக மிருணாள் தாகூர் இணைந்துள்ளார்.
இந்நிலையில், இப்படத்தின் தலைப்பு குறித்த கிளிம்ப்ஸ் சற்றுமுன்னர் படக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, ‘ஹாய் நான்னா’ திரைப்படம் வருகிற டிசம்பர் 21ம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்மை குறிப்பிடத்தக்கது.