எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கு அத்தியாவசியமற்ற முறையில் விமான பயணங்களை நேபாள விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் தடை விதித்துள்ளது.
எவரெஸ்ட் சிகரம் உள்ளிட்ட இமயமலைச் சிகரங்களைப் பார்த்துவிட்டுத் திரும்பும் போது, விமானம் விபத்துக்குள்ளானதில், ஐந்து மெக்சிகோ சுற்றுலாப் பயணிகளும், தனியார் மனங் ஏர் (Manang Air ) நிறுவனத்தால் இயக்கப்படும் சிறிய விமானத்தின் நேபாள விமானியும் கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனர்.
இந்த நிலையில் அத்தியாவசியமற்ற விமானங்களின் பயணங்கள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரை இடைநிறுத்தப்படும் என நேபாளத்தின் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் (CAAN) தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.