சுவீடனில் அல்குர்ஆன் எரிக்கப்பட்டமைக்கு எதிராக குரல் கொடுத்த ஒரே உலகத் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அல்குர்ஆன் எரிக்கப்பட்டமைக்கு எதிராக இதுவரை எந்தவொரு உலகத் தலைவரும் கருத்து தெரிவிக்கவில்லை.
இது தொடர்பில் பொதுநலவாய சபையில் கலந்துரையாடப்படும் என ஜனாதிபதி கூறியுள்ளதுடன், கருத்து சுதந்திரம் என்ற போர்வையில் குழப்பங்களுக்கு இடமளிக்க வேண்டாம் என மேற்குலக நாடுகளிடம் கோரிக்கையும் விடுத்துள்ளார்.