Home கனடா ஒரு சிகரட்டை புகைப்பதற்கு நிகரான ஆபத்தினை எதிர் நோக்கும் ஒன்றாரியோ மக்கள்  

ஒரு சிகரட்டை புகைப்பதற்கு நிகரான ஆபத்தினை எதிர் நோக்கும் ஒன்றாரியோ மக்கள்  

by Jey

ஒன்றாரியோவில்   காற்றை சுவாசிக்கும் ஒவ்வொருவரும் நாளொன்றுக்க ஒரு சிகரட்டை புகைப்பதற்கு நிகரான ஆபத்தினை எதிர் நோக்கி  வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது

நாட்டின் காற்றை கண்காணிக்கும் ஆய்வாளர்கள் இந்த   தகவலை வெளியிட்டுள்ளனர்.

ஒன்றாரியோவின் ஹமில்டன் நகரில் வாழும் மக்களுக்கு  புற்றுநோய்  ஏற்படக்கூடிய  சூழ்நிலை உருவாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நகரின்  காற்றுடன்    ரசாயன பதார்த்தங்கள் கலந்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

காற்றின் தரம் புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய வகையிலானது என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். டொரன்டோ பல்கலைக்கழக பேராசிரியர் மெத்தியூ அடம்ஸ் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

பொருட்கள் முழுமையாக எரியாத போது வெளியாகும் ரசாயன பதார்த்தமான benzo (a)pyrene என்ற ரசாயன பதார்த்தம் ஹமில்டன் நகர வளியில் கலந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

related posts