பல்வேறு துறைகளில் சாத்தியமான முதலீடுகள் குறித்து கலந்துரையாடுவதற்காக சீன தொழில் முயற்சியாளர்களின் பெரும் குழுவொன்று பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்துள்ளனர்.
சுற்றுலா மற்றும் ஹோட்டல் தொழில், இரத்தினங்கள் மற்றும் நகைகள், விவசாயம், மருந்து பொருட்கள், உணவு பதப்படுத்துதல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் பொழுதுபோக்கு தொழில் உள்ளிட்ட பல துறைகளில் முதலீடு செய்வதற்காகவே குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பில் கலந்துக்கொண்ட Daguowen Culture Limited இன் தலைவர் Zhang Qihua, சர்வதேச கலாசார பரிமாற்றம் மற்றும் உலகளாவிய நிலையான அபிவிருத்தியை ஊக்குவித்தல் மற்றும் சீனாவில் இருந்து ஒரு மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஆற்றல் இலங்கைக்கு இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கைக்கான சீன சுற்றுலாப் பயணிகளின் வருகையை கூட்டாக ஊக்குவிப்பதற்காக Cognizance de Ceylon இன் தலைவர் சந்திரா விக்கிரமசிங்கவுடன் இணைந்து தாம் பணியாற்றவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதற்கமைய குறித்த சந்திப்பில் கலந்துகொண்ட Zhejiang பெண்கள் வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் Jin Mei Yang, இலங்கையில் பெண்கள் வலுவூட்டல் திட்டங்களுக்கு ஆதரவளிக்க தயாராக இருப்பதாக பிரதமரிடம் தெரிவித்துள்ளார்.