Home இலங்கை வங்கிக் கொள்கை வட்டி விகிதங்களைக் குறைத்துள்ள இலங்கை மத்திய வங்கி

வங்கிக் கொள்கை வட்டி விகிதங்களைக் குறைத்துள்ள இலங்கை மத்திய வங்கி

by Jey

இலங்கை மத்திய வங்கிக் கொள்கை வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளதாக அறிவித்துள்ள போதிலும் வணிக வங்கிகள் அதற்கேற்ப வட்டி விகிதங்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், வர்த்தக வங்கிகள் பாரிய இலாபத்தை ஈட்டி வருவதாக மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இன்று ஊடகங்களுக்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

வணிக வங்கிகளின் வட்டியை குறைக்க வேண்டும் என தான் கோரிக்கை விடுக்கவுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கூறினார். அவ்வாறான நிலையில் அந்த கோரிக்கை எவ்வாறு நிறைவேற்றப்படுகின்றது என்பதனை தாம் பார்த்துக் கொண்டிருப்பதாக ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

related posts