Home கனடா கனடாவில் வீட்டு வாடகையை குறைக்குமாறு கோரி போராட்டம்

கனடாவில் வீட்டு வாடகையை குறைக்குமாறு கோரி போராட்டம்

by Jey

ரொறன்ரோவில் வீட்டு வாடகையை குறைக்குமாறு கோரி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வீட்டு உரிமையாளர்கள் வாடகைக் கட்டுப்பாட்டு விதிகளுக்கு மதிப்பளிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வாடகைத் தொகை தொடர்ச்சியாக உயர்வடைந்து செல்வதனால் தங்களினால் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியவில்லை என வாடகைக் குடியுயிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வீட்டு உரிமையாளர்களுக்கு எதிரான இந்தப் போராட்டத்தில் சுமார் 300 பேர் வரையில் இணைந்து கொண்டிருந்தனர் என தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2019ம் ஆண்டில் வாடகைத் தொகை 25 வீதத்தினால் உயர்வடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

ஒரு புறம் வாடகைத்தொகை அதிகரிக்கும் அதேவேளை, வீடுகளின் தரம் தொடர்ச்சியாக குறைவடைந்து செல்வதாக வாடகைக் குடியிருப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கிங் மற்றும் யோர்க் வீதிகளுக்கு அருகாமையில் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

related posts