கனடாவில் தற்பொழுது ஏற்பட்டுள்ள காட்டுத் தீ காரணமாக ஒரு லட்சம் சதுர கிலோ மீற்றர் பரப்பளவு காணிகள் இதுவரையில் அழிவடைந்துள்ளன.
கனடாவின் பல்வேறு இடங்களில்; காட்டுத் தீ பரவுகையை அவதானிக்க முடிகின்றது.
கனடாவில் காட்டுத் தீ காரணமாக தீக்கிரையான பகுதி, பிரதான எரிகளான ஒன்றாரியோ ஏரி, எர்ரி ஏரி மற்றும் மிச்சிகான் ஏரி என்பனவற்றை உள்ளடக்கிய அளவு விசாலமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1989ம் ஆண்டு ஏற்பட்ட காட்டுத் தீயினால் 76000 சதுர கிலோ மீற்றர் பரப்பு தீக்கியரையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.