எகிப்து தலைநகர் கெய்ரோவில் 5 மாடி அடுக்குமாடி கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்ததில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மத்திய கெய்ரோவின் வடக்கே உள்ள ஃபதாயக் எல்கோபா என்ற இடம் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி ஆகும். இங்கு ஏராளமான பழமையான வீடுகள் உள்ள நிலையில் 5 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது.
இந்நிலையில் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மீட்புப்படையினர் படுகாயம் அடைந்த 8 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி 13 பேர் உயிரிழந்ததாக எகிப்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கட்டிட இடிபாடுகளுக்குள் யாரும் சிக்கி இருக்கிறார்களா என மோப்ப நாய்கள் உதவியுடன் மீட்பு பணியாளர்கள் தேடி வருகின்றனர்.
அதேவேளை தரைத்தளத்தில் வசித்து வந்த ஒருவர் பராமரிப்பு பணியின் போது பல்வேறு அஸ்திவாரங்கள் மற்றும் சுவர்களை அகற்றியதால் இந்த விபத்து நேரிட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.