மராட்டியத்தின் தானே மாவட்டத்தில் கத்வாலி கிராமம் அருகே பிவண்டி நாசிக் சாலையில் இன்று காலை 6.30 மணியளவில் ஜீப் ஒன்று சென்று கொண்டிருந்தது.
இதில், எதிர்திசையில் வந்த லாரி ஒன்று திடீரென ஜீப் மீது மோதி விபத்திற்குள்ளானது. இதன்பின்னர், அந்த ஜீப்பை 100 மீட்டர் தூரத்திற்கு இழுத்து சென்றது.
சம்பவ இடத்தில் 4 பேர் உயிரிழந்த சூழலில், மற்றவர்களை அருகேயிருந்தவர்கள் மீட்டு கல்வா நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதுதவிர காயமடைந்தவர்களில் திலிப் குமார் விஷ்வகர்மா (வயது 29), சேத்னா கணேஷ் (வயது 19), குணால் தியானேஷ்வர் பாம்ரே (வயது 22) ஆகியோர் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.