மணிப்பூர் வன்முறையில் இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். 300-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, மணிப்பூரில் வன்முறையால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று பார்வையிட்டார்.
தொடர்ந்து அம்மாநில முதல் மந்திரி, முக்கிய மந்திரிகள் மற்றும் பல்வேறு சமூகத்தினரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
மேலும் மணிப்பூரில் கவர்னர் தலைமையில் அமைதிக் குழுவை அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டது.
இந்தக் குழுவில் மணிப்பூர் மாநில முதல் மந்திரி, மந்திரிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இடம்பெற்று இருந்தனர்.