தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கான தீர்வாகச் சமஷ்டியை வலியுறுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோரை நோக்கி ஆத்திரத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளிப்படுத்தியுள்ளார்.
அதன்படி ”பேச விரும்பாவிடின் அனைத்தையும் நிறுத்திவிடலாம்” என நிறைவேற்று அதிகார தொனியில் தெரிவித்துள்ளமை தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தியுள்ளது.
13ஆவது திருத்தத்தின் அடிப்படையிலான அதிகாரப் பகிர்வு தொடர்புபட்ட விடயங்களை முன்வைத்த போது, அதற்கு இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் தமது ஆட்சேபனைகளை வெளியிட்ட பின்னணியில் ஜனாதிபதி என்ற அதிகார தோரணையில் ரணில் விக்ரமசிங்க பதிலளித்துள்ளார்.