பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தின் கெலவ்னா பகுதியில் இரண்டு சிறுமிகளை காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது 8 வயதான அவுரா பால்டன் மற்றும் 10 வயதான ஜஸ்வா கோல்டன் ஆகிய இரண்டு சிறுமிகளை காணவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தாயுடன் கெலவ்னா பகுதிக்கு பயணம் செய்த இருவரும் இரண்டு சிறுமிகளும் காணவில்லை என அவர்களது தந்தை முறைப்பாடு செய்துள்ளார். இது தொடர்பில் சர்ரே போலஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் 30 ஆம் திகதிக்கு பின்னர் இந்த பிள்ளைகளையும் தாயையும் காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது.