அமைச்சர் செந்தில் பாலாஜி பதவியில் நீடிப்பதை எதிர்த்த வழக்குகளை அடுத்த வாரத்திற்குத் தள்ளிவைத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
அதிமுக முன்னாள் எம்.பி. ஜெயவர்த்தன் உள்ளிட்ட 3 பேர் ,செந்தில் பாலாஜி பதவியில் நீடிப்பதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது 2 ஆண்டுகளுக்குக் குறைவாகத் தண்டனை பெற்றவர் பதவியில் நீடிக்கலாம் என்பதால் எதன் அடிப்படையில் தகுதி இழப்பு ? , எந்த சட்டப்பிரிவில் செந்தில் பாலாஜி தகுதி இழப்புக்கு ஆளாகிறார் ? என ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அமர்வு கேள்வி எழுப்பியது.
ஒரு மாதத்துக்கு மேல் காவலில் உள்ள ஒருவர் எப்படி அமைச்சராகத் தொடர முடியும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.வாதங்கள் முடிவில் தமிழக அரசு தரப்பு வாதங்களுக்காக விசாரணையைச் சென்னை ஐகோர்ட்டு தள்ளிவைத்தது.