Home இந்தியா மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க மத்திய அரசு தயார்

மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க மத்திய அரசு தயார்

by Jey

மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி இன மக்களுக்கும் பழங்குடி இன மக்களுக்கும் இடையே நடைபெற்று வரும் மோதல் 2 மாதத்துக்கு மேல் நீடித்து வருகிறது.

இதுவரை 100-க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி விட்டதால் இப்பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய அரசை அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், மணிப்பூர் விவகாரம் இரண்டாவது நாளாக இன்றும் நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பி வருகிறது.

மக்களவை இன்று கூடியதும், மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால், மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது என்று மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் இரு அவைகளிலும் மணிப்பூர் குறித்து மத்திய மந்திரி அமித்ஷா எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்து அறிக்கை தாக்கல் செய்வார் என்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வேண்டுமென்றே அவையை முடக்குகின்றனர் என ராஜ்நாத் சிங் கூறினார்

related posts