Home இந்தியா குறைவான தண்ணீரையே கர்நாடகம் திறந்து விட்டிருக்கிறது- டாக்டர் ராமதாஸ்

குறைவான தண்ணீரையே கர்நாடகம் திறந்து விட்டிருக்கிறது- டாக்டர் ராமதாஸ்

by Jey

காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு ஆணையிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் அவசர வழக்கைத் தொடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது, காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, ஜூலை 22-ம் நாள் வரை 33.31 டி.எம்.சி தண்ணீரை கர்நாடகம் திறந்து விட்டிருக்க வேண்டும்.

ஆனால், 4 டி.எம்.சி.க்கும் குறைவான தண்ணீரையே கர்நாடகம் திறந்து விட்டிருக்கிறது.
இன்று வரை சுமார் 30 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடக அரசு பாக்கி வைத்திருக்கிறது.

கர்நாடக அணைகளில் இன்று காலை நிலவரப்படி 55 டி.எம்.சி.க்கும் கூடுதலான தண்ணீர் உள்ளது. அதுமட்டுமின்றி, கர்நாடக அணைகளுக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்திருக்கிறது.

related posts