இலங்கையில் 83ஆம் ஆண்டு ஜூலை மாதம் இடம்பெற்ற வன்முறையில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் பொரளை மயானத்திற்கு அருகாமையில் நினைவஞ்சலி நிகழ்வு ஒன்றை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கறுப்பு ஜூலை என்று எனப்படும் வன்முறை சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்காக, அவர்களது உறவினர்கள் மற்றும் சிவில் அமைப்புகள் இணைந்து குறித்த நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளார்கள்.
எனினும் இந்த நிகழ்வு நடைபெறும் இடத்தில் சுமார் நூற்றுக்கணக்கான படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸார், இராணுவம், விஷேட அதிரடிப்படையினர் மற்றும் நீர்த்தாரை வண்டிகள் என பாதுகாப்பு படையினர் சுற்றிலும் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, குறித்த இடத்தில் அமைதியான முறையில் நிகழ்வுகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், ஒருசிலர் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.