கிரீஸ் நாட்டில் இதுவரை இல்லாத வகையில் நடப்பு ஆண்டில் பெரிய அளவில் காட்டுத்தீ பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அந்நாட்டிற்கு உட்பட்ட கோர்பு தீவில் திடீரென பல இடங்களில் காட்டுத்தீ பரவியுள்ளது.
இதனால், தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் போராடி வருகின்றனர். இதுவரை 2,500 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு உள்ளனர்.
சுற்றுலாவாசிகள் அதிகம் விரும்ப கூடிய ரோட்ஸ் தீவின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் கடந்த வாரம் செவ்வாய் கிழமை பெரிய அளவில் காட்டுத்தீ பரவியது.
இதனை தொடர்ந்து, லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்புக்காக முன்பே தப்பி வெளியேறி விட்டனர் என சி.என்.என். ஊடகம் தெரிவித்துள்ளது.