விளைந்த நெற்பயிர்களை அழித்து, சுரங்கப்பணிகளைத் தொடங்கியுள்ள நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் அத்துமீறலை இந்திய ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசுகள் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் இரண்டாவது சுரங்கப் பணிகளுக்காக மேல் வளையமாதேவி உள்ளிட்ட கிராமங்களில் விளைந்து நிற்கும் நெற்பயிர்களை அழித்து, ஏழை-எளிய மக்களின் நிலங்களை வலுக்கட்டாயமாக அபகரிக்கும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது.
தங்கள் நிலம் பறிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடும் விவசாயிகளை திமுக அரசு காவல்துறையின் மூலம் அடக்குமுறைகளை ஏவி கைது செய்வது அப்பட்டமான எதேச்சதிகாரப்போக்காகும்