Home உலகம் மெட்டாவுக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் நுகர்வோர் ஆணையத்தால் – வழக்கு பதிவு

மெட்டாவுக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் நுகர்வோர் ஆணையத்தால் – வழக்கு பதிவு

by Jey

பேஸ்புக் நிறுவனத்துக்கு 14 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் உள்ள பெடரல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

மெட்டா நிறுவனம் தொடர்பான நட்டஈட்டை அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

பயனாளர்களுக்கு முறையாகத் தெரிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்பிலேயே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன் மூலம் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் சரியான அறிவு இல்லாமல் சேகரிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மெட்டாவுக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் நுகர்வோர் ஆணையத்தால் தொடர்புடைய வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மேலும் இந்த அப்ளிகேஷன் 271,000 முறை டவுன்லோட் செய்யப்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது.

 

related posts