Home விளையாட்டு இலங்கைக்கு எதிராக பாகிஸ்தானின் மிகப்பெரிய வெற்றி

இலங்கைக்கு எதிராக பாகிஸ்தானின் மிகப்பெரிய வெற்றி

by Jey

இலங்கை-பாகிஸ்தான் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் கடந்த 24-ந்தேதி தொடங்கியது.

இதில் முதலில் பேட் செய்த இலங்கை 166 ரன்னில் முடங்கியது. பின்னர் தனது முதல் இன்னிங்சை விளையாடிய பாகிஸ்தான் 4-வது நாளில் 5 விக்கெட்டுக்கு 576 ரன்கள் சேர்த்து ‘டிக்ளேர்’ செய்தது.

இதைத் தொடர்ந்து 410 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி 67.4 ஓவர்களில் 188 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.

இதன் மூலம் பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இலங்கைக்கு எதிராக பாகிஸ்தானின் மிகப்பெரிய வெற்றியாக இது அமைந்தது.

அதே சமயம் உள்நாட்டில் இலங்கையின் மோசமான தோல்வியாகவும் பதிவானது.
போட்டி நேற்று நடைபெற்றது.

இதில் முதலாவது பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 23 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 114 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து களம் இறங்கிய இந்திய அணி 22.5 ஓவர்களில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 118 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் பல மாற்றங்களை கேப்டன் ரோகித் சர்மா மேற்கொண்டார்.

தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷன் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களம் இறங்கினர். அடுத்தடுத்த வரிசைகளில் சூர்யகுமார் யாதவ், ஹர்த்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூரும், 7வது வரிசையில் கேப்டன் ரோகித் சர்மாவும் களம் இறங்கினர்.

 

related posts